லெவே நினைவு மண்டபம் திறப்பு விழா: 21.02.2019

இறை ஊழியர் லூயி லெவே, சருகணி, திரு இருதயங்களின் ஆலய வளாகத்தில் அவரே தெரிவு செய்த இடத்தில் அமைந்துள்ள கல்லறையில் துயில் கொள்கிறார். தந்தை லெவே அவர்களுக்கான புனிதர் பட்டத் திருப்பணியில் அவரது கல்லறை அமைந்துள்ள இடத்தைப் புதுப்பித்து புதிய நினைவு மண்டபம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. லெவே நினைவு மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா 21 பிப்ரவரி 2019 (வியாழன்) அன்று மாலை நடைபெற்றது. திரு. சேவியர் அவர்கள் பதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். சிவகங்கை மறைமாவட்ட ஆயர், மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்கள் நினைவு மண்டபத்தை அர்ச்சித்துப் புனிதப்படுத்தினார். திறப்பு விழாவைத் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு மேதகு ஆயர் அவர்கள் தலைமையில் சருகணி பங்கு ஆலயத்தில் லெவே தின சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
leve-memrl-hallஅருட்பணி.சேவியர் அல்போன்ஸ் சே.ச., அவர்கள் இறை ஊழியர் லெவே அவர்களின் புண்ணிய வாழ்வு பற்றி சிறப்பு மறையுரை வழங்கினார். இயேசு சபை குருக்கள், சிவகங்கை மறைமாவட்ட குருக்கள் மற்றும் பிற துறவற சபை குருக்கள் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினார்கள். அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் மற்றும் பல்வேறு பங்குகளிலிருந்து வந்திருந்த இறைமக்கள் திருப்பலியில் பங்குபெற்று இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.
லெவே நினைவு மண்டபத்தைக் கட்டியெழுப்ப முழுமையான நன்கொடை வழங்கிய திரு. சுவாமிக்கண்ணு, திருமதி. மேரி ராஜம்மாள் (சருகணி) குடும்பத்தினருக்கு சிவகங்கை மறைமாவட்டத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்.
அனைவரும் இறை ஊழியர் லெவே அவர்களின் கல்லறையைச் சந்தித்து அவரது பரிந்துரையால் இறைவனின் கொடைகளை ஏராளமாகப் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.

பணி. s ஜேம்ஸ் அந்துவான் தாஸ்
வேண்டுகையாளர்
புனிதர் பட்டத் திருப்பணிக்குழு
blessed-by-bp